பெரம்பலூர் தொகுதி திமுக எம்.பியும், அமைச்சர் நேருவின் மகனுமான அருண்நேரு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு திமுகவினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருவதால் அருண்நேரு டில்லியில் உள்ளார்.
எனவே திருச்சி திமுக நிர்வாகிகள் டில்லி சென்று அருண் நேருவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது பிரமாண்ட் கேக் வெட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். திமுக வழக்கறிஞர் மணிபாரதி, கவுன்சிலர் ராமதாஸ், முத்து செல்வம், தில்லை மெடிக்கல் மனோகர், முன்னாள் கவுன்சிலர் கவிதா உள்பட ஏராளமானோர் டில்லி சென்று வாழ்த்து தெரிவித்தனர்.