புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இன்று காலையிலும் 10 மணி வரை விடாது மழை கொட்டிக்கொண்டிருந்தது. கடலோர பகுதிகளிலும் கனமழை கொட்டியது. தொடர்ந்து இன்று மாலை வரை மழை பெய்யும் அளவுக்கு வானம் கும்மிருட்டாக இருந்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை 6.30 மணி வரையில் முக்கிய இடங்களில் பதிவான மழை அளவு(மி.மீ) வருமாறு:
ஆதனக்கோட்டை 27.00
பெருங்களூர் 34.00
புதுக்கோட்டைI 24.60
ஆலங்குடி 27.20
கந்தர்வகோட்டை 32.60
கரம்பக்குடி 21.50
மழையூர் 14.00
கீழாநிலை 8.30
திருமயம்18.50
அரிமளம் 15.00
அறந்தாங்கி 33.20
ஆயிங்குடிI 26.20
நாகுடி33.60
மீமிசல் 40.60
ஆவுடையார்கோவில் 74.80
மணமேல்குடி44.40
இலுப்பூர் 20.00
குடுமியான்மலை 12.40
அன்னவாசல் 33.20
விராலிமலை 34.00
உடையாளிப்பட்டி 15.20
கீரனூர் 35.40
பொன்னமராவதி 14.00
காரையூர் 12.60
மாவட்டத்தில் மொத்தம் 652.30மி.மீ. மழை பெய்துள்ளது.