மேட்டூர் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. மேலும் கரூர் காவிரி ஆற்றில் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணைக்கு காவிரியில் நேற்று 1,371 கன அடி நீர்
வந்து கொண்டிருந்த நிலையில், நீர்வரத்து அதிகரித்து தற்போது 4,321 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. காவிரியில் 4,121 கன அடியும், தென்கரை வாய்க்காலில் 200 கன அடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது. கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் வாய்க்கால் உள்ளிட்ட கிளை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படவில்லை.