செல்போன் திருட்டு…..ஒருவர் கைது..
அரியலுார், ஜெயங்கொண்டம், தச்சன் தெருவைச் சேர்ந்தவர் ஜோதிகரன் ( 43). இவர் கடந்த டிச.10 ந் தேதி திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்குள்ள கழிவறைக்கு சென்றபோது அங்கிருந்து 2 மர்ம நபர்கள் ஜோதிகரனை தாக்கி, கத்தி முனையில் ரூ.1500 பணம் மற்றும் அவரது செல்போனை பறித்து சென்றுள்ளனர். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். சேலம், மேட்டூர், மேச்சேரியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (33). இவர் கடந்த டிச.10 ந் தேதி திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் சேலம் செல்வதற்காக சேலம் பஸ் ஏறினார். அப்போது இவரது பின்னே நின்றிருந்த மர்ம நபர் வேல்முருகன் பாக்கெட்டில் இருந்த செல்போனை திருட முயன்றபோது கையும், களவுமாக மாட்டிக்கொண்டார். இதையடுத்து அவரை கண்டோண்மென்ட் போலீசில் ஒப்படைத்தனர். அங்கு போலீசார் நடத்திய விசாரணையில் செல்போன் திருடியது கீழ சிந்தாமணி, ஓடத்துறை சாலை விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது29) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மணிகண்டனைகைது செய்தனர்.
திருச்சி ஜிஎச்-ல் சிறை கைதி சாவு….
அரியலுார் மாவட்டம் மீன்சுருட்டி மேல தெருவைச் சேர்ந்தவர் கருணாகரன் (54). இவர் மயிலாடுதுறை, அணைக்கரை சத்திரத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் கடந்த ஏப்.25ந்தேதி முதல் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நவ.29ந்தேதி இவர் சிறுநீர் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருச்சி மத்திய சிறை அதிகாரி ஷர்மிளா அளித்த புகாரின் பேரில் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
ஸ்ரீரங்கத்தில் முதியவர் மாயம்…
ஸ்ரீரங்கம், ரெங்க நகர், ராஜாஜி தெருவைச் சேர்ந்தவர் நாராயணன் (43). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது தந்தை வெங்கடாச்சலம் (73), இவர் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர். சம்பதவன்று வெங்கடாச்சலம் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த டிச.6 ந்தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற வெங்கடாச்சலம் மாயமானார். பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து நாராயணன் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
போலி பாஸ்போர்ட்… 2 பேர் கைது.
தஞ்சை மாவட்டம் திருவையாறு, திருபந்துரையைச் சேர்ந்தவர் பக்ரூதீன் (51). இவர் டிச.9 ந்தேதி சார்ஜா செல்வதற்காக திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது இம்மிகிரேசன் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோனையில் பக்ரூதீன் போலி ஆவணங்கள் சம்ர்ப்பித்து தன் பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர், முகவரி ஆகியவற்றை மாற்றி கொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. இது குறித்து இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் அவரை கைது செய்தனர். இதேபோல் சிவகங்கை, தேவகோட்டை, வெற்றியாளங்குளத்தைச் சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது51). இவர் டிச.9 ந்தேதி மலேசியா செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்தார். அங்கு இம்மிகிரேசன் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோனையில் அவர் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து பிறந்த தேதி மற்றும் பிறந்த ஊரை மாற்றி கொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. இது தொடர்பாக இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் அவரை கைது செய்தனர்.
ஆர் எம் எஸ் ஊழியர்கள் உண்ணாவிரதம்
இந்தியா முழுவதும் 94 அஞ்சல் ஆர்.எம். எஸ். அலுவலகத்தை முட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் தமிழகத்தில் 10 இடங்களிலும், திருச்சி கோட்டத்தில் குடந்தை, கருர், திண்டிவனம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஆர்.எம்.எஸ் யை மூடி விட்டத்தை கண்டித்து அகில இந்திய அஞ்சல் ஆர் எம் எஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் திருச்சி வில்லியம்ஸ் ரோட்டில் உள்ள ஆர்.எம். எஸ். அலுவலக வளாகத்தில் இன்று முதல் 2 நாட்கள் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. இன்று தொடங்கிய
உண்ணவிரத போராட்டத்திற்கு அகிலஇந்திய ஆர் எம் எஸ்.ஊழியர் சங்கத்தின் கோட்ட செயலாளர் நம்பி ஆனந்தன், எப். என்.பி.ஒ.கோட்ட செயலாளர் ரமேஷ்குமார் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். சம்மேளன குழு உறுப்பினர் கோபால், மண்டலச் செயலாளர் பாலு சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தார். அகில இந்திய துணைத் தலைவர் பழனிவேலு வரவேற்றுரை ஆற்றினார். உண்ணாவிரத்தில் அகில இந்திய துணை தலைவர் பழனி சுப்ரமணிபம் கண்டன உரை ஆற்றினார். திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தில் செயல்பட்ட ஆர்.எம். எஸ். அலுவலகத்தை மீண்டும் அங்கு செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணவிரதம் இருந்தனர். முடிவில் கிளைச் செயலாளர் பிராபகரன் நன்றி கூறினார்.
இளம்பெண் மாயம்..
திருச்சி காஜா பேட்டை செபஸ்தியார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மகள் அடைக்கல மேரி என்கிற ரஞ்சிதம் (வயது 41). இவர் கடந்த 6-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை .இது குறித்து அவரது சகோதரி சந்தன மேரி பாலக்கரை போலீசில் புகார் செய்தார் .அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செல்போன் டவரில் ரூ.20 லட்சம் மின்சாதன பொருட்கள் திருட்டு
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பனகல் தெரு பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர் 2001ல் அமைக்கப்பட்டது. பின்னர் அந்த நிறுவன அதிகாரிகள் மேற்கண்ட செல்போன் டவரை பார்வையிட்டபோது அதிலிருந்த ரூ. 20 லட்சத்து 28,72 மதிப்பிலான மின்சாதன பொருட்கள் மற்றும் உதிரி பாகங்கள் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிலம் கையகப்படுத்தும் அலுவலர் சென்னை கீழ்ப்பாக்கம் புரசைவாக்கம் ஹை ரோடு பகுதியைச் சேர்ந்த தாஜ்மல்ஹான்
(40) என்பவர் திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் 5 -வது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போன் டவரில் இருந்த மின்சாதன பொருட்கள் திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.