கேரள மாநிலம் வைக்கத்தில் நாளை பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். இதற்காக இன்று முதல்வர் ஸ்டாலின் விமானம் முலம் சென்னையில் இருந்து கொச்சி சென்றார். கொச்சி நெடும்பாசேரி விமான நிலையத்தில் முதல்வருக்கு கேரள மாநில திமுக அமைப்பாளர் கே. ஆா். முருகேசன் தலைமையில் கேரளத்தின் பாரம்பரிய செண்டை மேளம் இசைக்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில்
திமுகவினர் திரளாக பங்கேற்றனர். கேரள அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகளும் வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பு குறித்து முதலவர் கூறும்போது, கேரளாவில் எனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு மிகுந்த உற்சாகத்தை தந்தது என குறிப்பிட்டுள்ளார்.