அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், கோவிந்தபுரம் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் இன்று (11.12.2024) நடைபெற்றது. 90 பயனாளிகளுக்கு ரூ.1.22 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வழங்கினார்.
இம்முகாமில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக
வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் மணிகண்டன், சமூக பாதுகாப்பு திட்டம் துணை ஆட்சியர் (பொ) கீதா, அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, கோவிந்தபுரம் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் மற்றும் அனைத்துத்துறை மாவட்ட நிலை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்