புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி யில்
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை , வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆகியவை இணைந்து நடத்தும் வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சியினைஆட்சியர் மு.அருணா துவக்கி வைத்தார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
நடைபெற்ற போட்டித்தேர்வு வகுப்பில் பயிற்சி பெற்று
காவலதுணை ஆய்வாளர் பணியிடத்திற்கு
தேர்ச்சி பெற்ற புதுக்கோட்டை மாணவிக்கு இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அருணா
புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜி.அமீர்பாட்ஷா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள்
மோ..மணிகண்டன்,பே.வேல்முருகன் (தொ.வ), கல்லூரி முதல்வர் (பொ. ) ச.ஞானஜோதி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.