தேசியக் கவி பாரதியாரின் பிறந்த நாளையொட்டி, தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், பாபநாசம் வட்டார வள மேற்ப் பார்வையாளர் (பொறுப்பு) முருகன் பாரதியாரின் படத்திற்கு மாலையணிவித்தது மலர் தூவி மரியாதைச் செலுத்தினார். இதில் பள்ளித் தலைமை யாசிரியர் ரமேஷ், ஆசிரியை அமுதா உட்பட மாணவர்கள் பங்கேற்றனர்.