Skip to content
Home » நாளை வைக்கம் விழா…….கொச்சி சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்

நாளை வைக்கம் விழா…….கொச்சி சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கத்தில் தீண்டாமைக்கு எதிராக போராட்டம் நடந்தது. இதில் பெரியார் சமூகநீதி காக்க போராடி வெற்றி பெற்றார். அந்த வெற்றியை நினைவுகூரும் வகையில் வைக்கத்தில் பெரியார் நினைவகமும், பெரியார் நூலகமும் தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டு உள்ளது.

வைக்கம் போராட்டத்தில் பெரியார் பங்கேற்று நூற்றாண்டு நிறைவை கொண்டாடுவதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வைக்கம் நகரில் உள்ள பெரியார் நினைவகத்தையும், நூலகத்தையும் புதுப்பித்திட ரூ.8 கோடியே 14 லட்சம் நிதி ஒதுக்கி உத்தரவிட்டார். அதைக்கொண்டு  பொியார் நினைவகம்  புதுப்பிக்கப்பட்டுள்ளது. நூலகம், பார்வையாளர் மாடம், சிறுவர் பூங்கா ஆகியவை சிறந்த முறையில் புனரமைக்கப்பட்டு உள்ளது. மேலும் அமர்ந்த நிலையில் பெரியார் சிலையும் இருக்கிறது.

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவையொட்டி புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (12-ந் தேதி) காலை 10 மணிக்கு திறந்து வைக்கிறார். இந்த விழாவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமை தாங்குகிறார்.

வைக்கம் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) சென்னையில் இருந்து விமானம் மூலம் கேரளா புறப்பட்டு சென்றார். கொச்சி சென்றடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னதாக வைக்கம் நூற்றாண்டு விழா குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், “நூறாண்டுகளுக்கு முன்பு நமது சமூகம் எப்படியிருந்தது. இப்போது நாம் எங்கு வந்தடைந்திருக்கிறோம் என்று சற்று நினைத்துப் பாருங்கள். இந்த மாற்றங்களுக்கு விதை தூவிய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் நாளை நான் கலந்து கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *