மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 116.86 அடி. அணைக்கு வினாடிக்கு 5,621 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1004 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 88.55 டிஎம்சி. அணை நிரம்ப இன்னும் சுமார் 5 டிஎம்சி தண்ணீர் தேவை. வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தால் மேட்டூர் அணை ஒரே நாளில் நிரம்பி விடும் சூழ்நிலை உள்ளது. மேட்டூர் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்தால் இந்த மாதத்தில் அணை நிரம்பிவிடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.