ராஜஸ்தான், குஜராத், உபி, ஹரியானா ஆகிய மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வந்தவர் சாமியார் ஆசாராம் பாபு. இவரது ஆசிரமத்தில் தங்கி படித்த உ.பி. மாநிலத்தை சேர்ந்த சிறுமியை சாமியார் ஆசாராம்பாபு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் சாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சாமியார் கைது செய்யபட்டு ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. . இந்த தீர்ப்பில் ஆசாராம் பாபு மற்றும் குற்றம் சாட்டப்பட்ட மேலும் 4 பேரும் குற்றவாளிகள் என்று ஏற்கனவே தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று மாலை அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. அதன்படி சாமியார் ஆசாராம்பாபுவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு குறித்து கருத்து கூறிய சாமியாரின் ஆதரவாளர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்தனர்.