சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்அதானி குழும முதலீடு தொடர்பாக விளக்கம் அளித்தார். பா.ம.க. உறுப்பினர் ஜி.கே.மணிக்கு பதிலளித்து பேசிய அவர்,”தமிழ்நாட்டில் அதானி நிறுவன முதலீடு குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. ஏற்கனவே நான் பலமுறை தெளிவுபடுத்தி விட்டேன். நான் அதானியை சந்திக்கவில்லை,அதானி விவகாரத்தை அரசியலாக்கி வருவதால் நான் இந்த விளக்கத்தை அளிக்கிறேன். அதானி முதலீடு பற்றி பொதுவெளியில் வரும் தகவல் குறித்து செந்தில் பாலாஜி ஏற்கனவே பதிலளித்து உள்ளார்.
அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும், நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென ‘இந்தியா’ கூட்டணி வலுயுறுத்துகிறது. பா.ஜ.க., பா.ம.க. இந்த கோரிக்கையை ஆதரிக்க தயாராக இருக்கிறதா என்பதை விளக்க வேண்டும்” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். இந்நிலையில் அதானி விவகாரத்தில் முதல்-அமைச்சர் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை என்று கூறி சட்டசபையில் இருந்து பா.ம.க. வெளிநடப்பு செய்தது.