தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகர், எழுப்பிய ஒரு கேள்விக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பதில்: தமிழ்நாடு முழுவதும் 49 துணை மின்நிலையங்கள் அமைக்க நிலத்தேர்வு நடைபெற்று வருகிறது. நிலத்தேர்வு நிறைவடைந்து விரைவில் புதிதாக 49 துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும் என்றார்.
இன்னொரு கேள்விக்கு அளித்த பதிலில் மின் வாரியத்தில் காலி பணியிடங்களை நிரப்ப நிதித் துறையில் அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கிடைக்கும் பட்சத்தில் தேவைக்கு ஏற்ப காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.
இவ்வாறு அமைச்சர் பதில் அளித்தார்.