டிஎன்பிஎஸ்சி குரூப்-1 மெயின் தேர்வு சென்னையில் இன்று தொடங்கியது. இத்தேர்வை 1,988 பேர் எழுதுகின்றனர்.
துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-1 மெயின் தேர்வு டிசம்பர் 10-ம் தேதி (இன்று) தொடங்கி 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 90 காலி இடங்களுக்கு நடத்தப்படும் இத்தேர்வில் தமிழ் தகுதித் தாள், பொது அறிவு தொடர்பான 3 தாள்கள் என மொத்தம் 4 தாள்கள் இடம்பெறுகின்றன. இத்தேர்வை எழுத 1,988 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 10 இடங்களில் தேர்வு நடைபெறுகிறது. இதற்காக 19 தலைமை தேர்வு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.