கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா இன்று காலமானார். அவருக்கு வயது 92. இவர் 1999 முதல் 2004 வரை கர்நாடக முதல்வராக இருந்தார். மத்திய அமைச்சர், மகாராஷ்ட்ரா கவர்னர் உள்ளிட்ட பதவிகளையும் அவர் வகித்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு அவர் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
எஸ்.எம்.கிருஷ்ணா எஸ்சி மல்லையாவின் மகன். இவர் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உ ள்ள மத்தூர் தாலுகாவில் சோமனஹள்ளி என்ற கிராமத்தில் ஒக்கலிக்கா சமூகத்தில் பிறந்தார் . மைசூரில் உயர்நிலைப் பள்ளி படிப்பை முடித்தார் . பின்னர் சட்டம் பயின்றார். பின்னர் அமெரிக்கா சென்றும் சட்டம் பயின்றார். 1962ல் முதன் முதலாக கர்நாடக மாநிலத்தில் எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.