தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில், வாடகைக் கார் ஓட்டுனர்களுக்கு, சிஐடியு அமைப்பு சாரா சங்கம் ஏற்பாட்டில் நலவாரிய உறுப்பினர் அட்டை பெற்று வழங்கப்பட்டது. தஞ்சை மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் சங்க (சிஐடியு) மாவட்டச் செயலார் பி.என்.பேர் நீதி ஆழ்வார் முன்னிலையில், சிஐடியு நிர்வாகிகள் எஸ்.கந்தசாமி, ரெ.ஞான சூரியன், தி.தனபால், என்.கந்தசாமி, மோரீஸ் அண்ணாதுரை ஆகியோர் வாடகைக்கார் ஓட்டுநர் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டையை வழங்கினர். அப்போது வாடகைக்கார் ஓட்டுனர் சங்க தலைவர், செயலாளர், பொருளாளர் கலந்து கொண்டனர்.