Skip to content
Home » கரூர்..வாடகை கடைக்கு 18% ஜிஎஸ்டி வரி…திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

கரூர்..வாடகை கடைக்கு 18% ஜிஎஸ்டி வரி…திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

  • by Authour

கரூரில், கடை வாடகைக்கு விதிக்கப்பட்ட 18% ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வலியுறுத்தி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்.

கரூர் மாவட்ட வர்த்தகம் மற்றும் தொழில் கழகம் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு வாடகை கடை கட்டிடங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசின் வணிகவிரோத சட்டங்களை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் ராஜூ தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது வாடகை கட்டிடங்களுக்கு விதிக்கப்பட்ட 18% வரியை திரும்ப பெற வலியுறுத்தியும், கடந்த 44 ஆண்டுகளாக செயல்பட்ட RMS நிறுவனத்தை இழுத்து மூடுவதற்குஎதிர்ப்பு தெரிவித்தும், மீண்டும் அதனை செயல்படுத்த வலியுறுத்தியும், மாநில அரசு ஆண்டுதோறும் 6- சதவீதம் கூடுதல் சொத்து வரி விதிப்பதை திரும்ப

பெற வலியுறுத்தியும், வணிகவரி கட்டண உயர்வு மற்றும் தொழில் வரி உயர்வை ரத்து செய்ய வலியுருத்தியும், குப்பை வரி மாநிலம் முழுவதும் ஒரே சீராக அறிவிக்க வலியுறுத்தியும், மாதாந்திர மின் கட்டணத்தை அமலாக்கம் செய்திட வலியுறுத்தியும், வணிக உரிமம் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்தலை உடனடியாகநிறைவில் நடைமுறைப்படுத்திட கோரியும் 100க்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த அமைப்பின் செயலாளர் வெங்கட்ராமன்,

மத்திய அரசு 5- முதல் 35% வரை ரெடிமேடு ஆடைகளுக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனை நிறுத்த வேண்டும் எனவும், இந்தியா முழுவதும் இரண்டு வரிகளை மட்டும் விதிக்க வேண்டும் எனவும், அந்நிய முதலீடு, ஆன்லைன் வர்த்தகம், வரி மேல் வரி விதிப்பு போன்றவைகளை வணிகர்கள் மீது சுமத்துவதை ஏற்க இயலாது எனவும், வரும் டிசம்பர் 21ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள பேரமைப்பின் கவுன்சில் கூட்டத்தில், வணிகர்களுக்கு எதிராக விதிக்கப்படும் வரிகளை கண்டித்து கடை அடைப்பு போராட்டம் நடத்தவும், டெல்லி நோக்கி பேரமைப்பு சார்பில் ஊர்வலம் நடத்தவும் தீர்மானங்களை இயற்றுவோம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *