Skip to content
Home » திருச்சி க்ரைம்…. கஞ்சா விற்பனை… ஐடி ஊழியர் தற்கொலை..

திருச்சி க்ரைம்…. கஞ்சா விற்பனை… ஐடி ஊழியர் தற்கொலை..

  • by Authour

மூதாட்டி பலி..

திருச்சி, கீழ ஆண்டாள் விதி, பிள்ளை தெருவை சேர்ந்தவர் சாந்தி 65. இவர் தனது தாயார் காமாட்சியுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 7ம் தேதி சாந்தி வீட்டின் தண்ணீர் தொட்டியின்  பைப்பை மூடுவதற்காக தொட்டியில் இறங்கியுள்ளார், அப்போது எதிர்பாராத விதமாக வழுக்கி தொட்டிற்குள்  விழுந்துள்ளார். இதில் சாந்தி தண்ணீரில் மூழ்கி சுயநினைவை இழந்தார். அருகில் இருந்தவர்கள் சாந்தியை மீட்டு உடனடியாக தனியார்  ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது சகோதரர் தியாகராஜன் அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது..

திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த சுரேந்தர் (31 )என்பவரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர். இதே போல் பாரா நல்லூர் காமராஜ் நகர் அருகே கஞ்சா விற்ற இபி ரோடு உப்பிலிய புரத்தைச் சேர்ந்த அருண்குமார் (24 )என்பவரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்தனர்.

போலி பாஸ்போர்ட் வழக்கில் ஒருவர் கைது…

திண்டுக்கல் வாக்கம்பட்டி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் அகஸ்டின் ராஜ் 52 இவர் கடந்த 8ம் தேதி துபாயில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார் . அங்கு இம்மிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் அகஸ்டின் ராஜ் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து பிறந்த தேதியை மாற்றி கொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. இது குறித்து இம்மிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் அகஸ்டின் ராஜை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

இளம்பெண் மாயம்…  

திருச்சி காஜா பேட்டை செபஸ்தியார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மகள் அடைக்கல மேரி என்கிற ரஞ்சிதம் ( 41). இவர் கடந்த 6ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது சகோதரி சந்தன மேரி பாலக்கரை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

செல்போன் டவரில் ரூ.20 லட்சம் மின்சாதன பொருட்கள் திருட்டு…

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பனகல் தெரு பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர் 2001ல் அமைக்கப்பட்டது. பின்னர் அந்த நிறுவன அதிகாரிகள் மேற்கண்ட செல்போன் தவறை பார்வையிட்டபோது அதிலிருந்த ரூபாய் 20 லட்சத்து 28,72 மதிப்பிலான மின்சாதன பொருட்கள் மற்றும் உதிரி பாகங்கள் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிலம் கையகப்படுத்தும் அலுவலர் சென்னை கீழ்ப்பாக்கம் புரசைவாக்கம் ஹை ரோடு பகுதியைச் சேர்ந்த தாஜ்மல்ஹான்
(வயது 40) என்பவர் திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் 5 -வது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போன் டவரில் இருந்த மின்சாதன பொருட்கள் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

ஐடி ஊழியர்  தற்கொலை…

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஏ.கே.எம் மஹால் குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரத்குமார் (வயது 29 . இவரதில்லை நகரில் ஒரு ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும் ஹேமப்பிரியா (25) என்பவருக்கும் கடந்த 15 மாதங்களுக்கு முன்பு பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சரத்குமார் ரூபாய் 4 லட்சம் லோன் வாங்கியுள்ளார். இது தொடர்பாக மனைவி கேள்வி எழுப்பிய போது கணவருக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டது .பின்னர் கணவரிடம் கோபித்துக் கொண்டு சேமப்பிரியா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் மனம் உடைந்த சரத்குமார் யாரும் எதிர்பாராத வகையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். இது குறித்து ஹேமப்பிரியா கொடுத்த புகாரின் அடிப்படையில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *