ஞாயிற்றுக்கிழமை…. (08.12.2024)
மேஷம்….
உங்கள் நலனை மேம்படுத்தும் பயனுள்ள முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். திருப்தியான நிலை காணப்படும். பணியிடத்தில் இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்கள் மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.
ரிஷபம்
இன்று மகிழ்ச்சியும் சந்தோஷமும் கிடைக்கும். முக்கிய முடிவுகள் நல்ல பலன் தரும். அதிர்ஷ்டம் மூலம் முன்னேற்றம் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை விரும்பி மேற்கொள்வீர்கள்.
மிதுனம்…
இன்று வழிபாடு மற்றும் பிரார்த்தனைக் கென்று சிறிது நேரம் ஒதுக்க உகந்த நாள். இதன் மூலம் ஆறுதலும் மகிழ்ச்சியும் கிடைக்கும். தொண்டு செயல்களில் ஈடுபடுவதன் மூலம் திருப்தி கிடைக்கும். பணியைப் பொறுத்த பயணங்கள் காணப்படுகின்றது. உங்கள் முயற்சிக்கு சிறந்த பலனைப் பெறுவீர்கள்.
கடகம்…
திரைப்படம் பார்த்தல் மற்றும் இசை கேட்டல் ஆகியவற்றுக்கு உகந்த நாள். இதனால் அமைதியும் ஆற்றலும் கிடைக்கும். பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாகப் பணியாற்ற வேண்டும்.மேலதிகாரிகளின் ஆதிருப்திக்கு ஆளாவீர்கள். இது உங்களுக்கு கவலையை அளிக்கும். பணியிடத்தில் நேர்மை மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக நன்மை பெறுவீர்கள். பணி நிமித்தமான பயணத்திற்கான சாத்தியம் உள்ளது.
சிம்மம்…
இன்றைய நாள் சிறிது மாறுதல்களைக் கொண்டு சேர்க்கும். நீங்கள் சூழ்நிலையை சமாளித்து உங்களுக்கு சாதமாக ஆக்கும் தைரியத்துடன் காணப்படுவீர்கள். பயணங்கள் ஏற்படலாம். பணியிடத்தில் நேர்மை மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக நன்மை பெறுவீர்கள். பணி நிமித்தமான பயணத்திற்கான சாத்தியம் உள்ளது.
கன்னி…
இன்று பலன்கள் கலந்து காணப்படும். எந்த செயலையும் செய்வதற்கு முன்பு யோசித்து செய்வது நல்லது. உங்கள் தொடர்பாடல் திறமையில் கவனம் தேவை. இன்றைய பணிகளில் சவால்கள் நிறைந்திருக்கும் என்பதால் நீங்கள் பணிகளை முடிப்பதில் மும்மரமாக இருப்பீர்கள். நீங்கள் உங்கள் பணிகளை புத்திசாலித்தனமாக முடிக்க அனைத்து முயற்சிகளையும் எடுப்பீர்கள்.
துலாம்…
உங்கள் செயல்களை மேற்கொள்ளும்போது உங்கள் புத்திசாலித் தனத்தை பயன்படுத்த வேண்டும். இன்று பதட்டம் காரணமாக பாதிப்பு ஏற்படும். உங்கள் சக பணியாளர்கள் வளர்ச்சி பெற்று முன்னணியில் இருப்பார்கள். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.
விருச்சிகம்….
உங்கள் தாயின் ஆதரவு உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். இன்று நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். பொறுமையாக இருக்க வேண்டும். நீங்கள் காயமடைய வாய்ப்ப்புள்ளது என்பதால் கவனமாக இருங்கள். இன்று நீங்கள் பணிகளை முடிக்க அதிக முயற்சி எடுக்க வேண்டும். உங்கள் பணிகளை முடிப்பது கடினமாக உணர்வீர்கள். உங்கள் பணிகளை திட்டமிட்டு மேற்கொள்வது நல்லது.
தனுசு…
இன்று பலன்கள் கலந்து காணப்படும்.பூர்வீகச் சொத்து மூலமாக பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் செயல்களை கவனமாகக் கையாள வேண்டும். உங்கள் கடினமான முயற்சி மூலம் பணியில் வளர்ச்சி காண்பீர்கள். உங்கள் பணியின்போது சிறு தடைகளை சந்திப்பீர்கள்.
மகரம்..
இன்று புதிய தொடர்புகள் கிடைக்கும். அவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு ஆதரவாக இருப்பார்கள். நீங்கள் பொதுக் கூடங்களில் கலந்து கொள்வீர்கள். பணியிடத்தில் அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும். உங்கள் பணி தொடர்பான பயணம் காணப்படும்.
கும்பம்….
நீங்கள் அடிக்கடி பயணம் செய்ய நேரும். சில விஷயங்கள் தோன்றி உங்களுக்கு கவலை ஏற்படுத்தும். உங்கள் பணிகளை மேற்கொள்ளும்போது சில தடைகளை சந்திப்பீர்கள். பணியிடத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்காது.
மீனம்…
இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல. தியானம் மற்றும் யோகா உங்களுக்கு சிறந்த ஆறுதலை அளிக்கும். இன்று பணியில் சுமாரான வளர்ச்சி காணப்படும். உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலாது.