திருச்சி , ஸ்ரீரங்கம் மேல சித்திரை வீதி பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன்(41) . இவரது மகன் ஸ்ரீநாத் எம்பிஏ படித்து வருகிறார். திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் கடந்த 5ம்தேதி வாசுதேவன் ஹைதராபாத் சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் ஸ்ரீநாத் இல்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக வாசுதேவன் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.