அரியலூர் மாவட்டம் அழகிய மணவாளன் அருகே உள்ள அரசன்சேரி கிராமத்தை சேர்ந்தவர் திருஞானசேகர். இவர் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இவர் வீட்டில் ஆட்கள் இல்லாத போது, பூட்டியிருந்த வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைய முயன்ற மர்ம நபரை, சத்தம் கேட்டு அந்த கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் விரட்டி பிடித்தனர். பிடிபட்ட நபரை தூத்தூர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
தூத்தூர் போலீசார் பிடிபட்ட நபர் குறித்து விசாரணை மேற்கொண்ட போது, அவர் ரெட்டிபாளையம் அருகே உள்ள சேலத்தான்காடு கிராமத்தை சேர்ந்த தனுஷ் குமார் என்பது தெரியவந்தது. மேல்விசாரணையில் தனுஷ் குமார் மீது அரியலூர் மாவட்டத்தில் பல காவல் நிலையங்களில் 5 திருட்டு குற்றவழக்குகள் பதிவாகி உள்ளது போலீசாருக்கு தெரியவந்தது. அந்த 5 திருட்டு வழக்குகள் அனைத்தும் தனுஷ் குமார் சிறுவராக( மைனராக) இருந்த போது ஈடுபட்டது தெரியவந்தது. தற்போது தனுஷ் குமாருக்கு 19 வயது ஆகி 2 மாதங்கள் ( மேஜராக) தொடங்கிவிட்டது. மைனர் பகுதியில் இருந்து திருட்டை மேற்கொண்டு தற்பொழுது மேஜராகியும் அதே வேலையில் ஈடுபட்ட தனுஷ் குமாரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்