திருச்சி ரயில்வே ஸ்டேசனில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் செபஸ்டின், க்ரைம் ஆய்வாளர் ரமேஷ் குழுவினர் 6வது நடைமேடையில் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டிருந்தனர். ஹவுராவிலிருந்து திருச்சிக்கு ரயில் வந்தது. அப்போது கருப்பு பையுடன் சந்தேகத்துக்கு இடமாக வந்த நபரின் உடைமைகளை சோதனை செய்தனர். சோதனையில் அவரது பையில்
உரிய ஆவணங்கள் இல்லாமல் கட்டுக்கட்டாக ரூ. 75 லட்சம் எடுத்து வந்தது தெரிய வந்தது.
உடனடியாக போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வேதமாணிக்கம் என்பவரது மகன் ஆரோக்கியதாஸ் (49) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து வருமான வரித்துறையினருக்கு ரயில்வே பாதுகாப்பு காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். பின்னர் வருவான வரித்துறை துணை இயக்குனர் ஸ்வேதாவிடம் பணத்தை ஒப்படைத்தனர். இதுகுறித்து வருமானத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த பணம் ரூ. 75 லட்சம் ஹவாலா பணம் என கூறப்படுகிறது.