பாபர் மசூதி இடிப்பு நிறைவு தினத்தை முன்னிட்டு SDPI கட்சி திருச்சி மாவட்டம் சார்பாக பாலக்கரையில் மாபெரும் மக்கள் திரள் ஆர்பாட்டம் மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் அசாருதீன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி தலைவர் ஷேக் முகம்மது மற்றும் கிழக்கு தொகுதி தலைவர் சபியுல்லா கண்டன கோஷம் எழுப்பினர். இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ
கட்சியின் தமிழ் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது கலந்துக் கொண்டு கண்டன எழுச்சி உரையாற்றினார்.
மேலும், திருச்சி அதாயி அரபிக் கல்லூரி கல்வி குழுமத்தின் தாளாளர் இமாம் முஹம்மது ஃபைஜூல் பாரி மற்றும் விமன் இந்தியா மூவ் மெண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் ஆலிமா. மெஹராஜ் பானு ஆகியோர்கள் கலந்துக் கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
மாவட்ட பொதுச்செயலாளர் முகமது சித்திக் இந்நிகழ்வை தொகுத்து வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் மாவட்ட துணை தலைவர் பிச்சை கனி,SDTU மாநில செயலாளர் முகம்மது ரபீக்,மாவட்ட செயலாளர்கள் மதர்.ஜமால் முஹம்மது,தளபதி அப்பாஸ்,ஏர்போர்ட்.மஜீத், மாவட்ட பொருளாளர் நியாமத்துல்லா, வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் அசாருதீன்,தெற்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் பக்ருதீன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பொன்னகர் ரபீக்,மற்றும் நிர்வாகிகள்,தொகுதி நிர்வாகிகள்,கிளை நிர்வாகிகள்,பொதுமக்கள், ஜமாத்தார்கள் என பெருந்திரளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக மேற்கு தொகுதி தலைவர் சையது முஸ்தபா நன்றியுரை ஆற்றினார்.