Skip to content
Home » அரியலூர் அதிமுகவின் கோட்டை…. எடப்பாடி பழனிசாமி பேச்சு

அரியலூர் அதிமுகவின் கோட்டை…. எடப்பாடி பழனிசாமி பேச்சு

அரியலூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அரசு கொறடாவுமான தாமரை. ராஜேந்திரனின் மகள் திருமண விழாவில், முன்னாள் முதலமைச்சரும், அதிமுக கழக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்று, மணமக்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார்.

அரியலூர் மாவட்ட  அதிமுக செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொரடாவுமான, தாமரை. ராஜேந்திரனின் மகள் பார்கவி- மதன்ராஜ்  திருமணம்   இன்று அரியலூரில்   நடந்தது. முன்னாள் முதலமைச்சரும், அதிமுக  பொதுச்செயலாளருமான, எடப்பாடி பழனிச்சாமி தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்தார்.
மணமக்கள் பார்கவி, மதன்ராஜ் ஆகியோரை வாழ்த்தி எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 2024 பாராளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெற்றோம் என்று கூறி வருகிறார்.ஆனால் அரியலூர் மாவட்டத்தில் உள்ள இரு சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்று 100% வெற்றியை அதிமுக பெற்றுள்ளது அரியலூர் மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளது .
கடந்த ஆட்சியில் அதிமுக நலத்திட்டங்கள் எதுவும் செய்யவில்லை என ஸ்டாலின் பத்திரிகை மற்றும் ஊடகத்தின் வாயிலாக செய்திகளை பரப்பி வருகிறார். இது கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் அதிமுக ஆட்சியின்போது அரியலூருக்கு மருத்துவக் கல்லூரி, ஜெயங்கொண்டத்தில் அரசு கலைக் கல்லூரி என 14 மருத்துவக் கல்லூரிகள், 6 சட்டக் கல்லூரிகள், வேளாண் ஆராய்ச்சி நிலையம், அனைத்து பகுதிகளிலும் மேம்பாலங்கள், சாலைகள் என பல்வேறு நலத்திட்டங்களை எனது தலைமையிலான ஆட்சியில் செயல்படுத்தி உள்ளேன்.

ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற 46 மாதத்தில் தமிழகத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட தொடங்க முடியவில்லை. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட நலத்திட்டங்களை ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி ஆட்சி நடத்தி வருகிறார் என்பதுதான் உண்மை .

இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பேசினார். இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், எம்.ஆர் விஜயபாஸ்கர், ஓ.எஸ். மணியன், கோகுல இந்திரா, காமராஜ், ப.மோகன், சின்னையா, கரூர் சின்னசாமி, கே.பி.அன்பழகன்,  சட்டமன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *