தஞ்சை டவுன் கரம்பை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 40). இவர் நேற்று முன்தினம் கல்லணை கால்வாய் சாலை சுற்றுலா மாளிகை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் சுரேஷ்குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.300ஐ பறித்து சென்றார். இது குறித்து சுரேஷ்குமார் தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் தெற்கு போலீசார் நடத்திய விசாரரணையில், தஞ்சை மானம்புசாவடியை சேர்ந்த உத்தமநாதன் (52) என்பதும், கத்தியை காட்டி பணத்தை பறித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதேபோல் தஞ்சை விளார் சாலை ஜெகநாதன்நகரை சேர்ந்தவர் ராஜா (27). இவர் நேற்று முன்தினம் வடக்குவாசல் சுடுகாடு அருகே வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் ராஜாவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.200ஐ பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் மேற்கு போலீசார் நடத்திய விசாரணையில், மேலவீதியை சேர்ந்த கார்த்திகேயன் (48), வீரராகவன் (55) என்பதும், கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.