ஆந்திர மாநிலத்தின் தலைநகராக ஐதராபாத் இருந்து வந்தது. ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டதால், தெலங்கானாவில் தலைநகராக ஐதராபாத் அறிவிக்கப்பட்டது. எனவே ஆந்திர தலைநகராக விஜயவாடா அறிவிக்கப்பட்டது. பின்னர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதிதாக அமராவதியை தலைநகராக்க திட்டமிட்டு பணிகளை செய்து வந்தார். இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் புதிய முதல்வராக வந்த ஜெகன்மோகன் ரெட்டி, அமராவதி பணிகளை அப்படியே கிடப்பில் போட்டு விட்டார். இந்த நிலையில் ஆந்திராவின் புதிய தலைநகராக விசாகப்பட்டினத்தை முதல்வர் ஜெகன் மோகன் இன்று அறிவித்தார்.