கோவை, மதுக்கரை பகுதியில் உள்ள ஒன்றிய அரசுப் பள்ளிகளில் நூற்றுக் கணக்கான ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் மதுக்கரை ஒன்றிய அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் ஜெயந்திமாலா – வின் கணவருக்கு இருதய நோய்க்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து குடும்ப சூழ்நிலை காரணமாக விருப்ப ஓய்வு பெற்றால் அதில் வரும் பணத்தை வைத்து கணவனின் மருத்துவ செலவிற்கு பயன்படும் என்று எண்ணிய ஆசிரியை (VRS) விருப்ப ஓய்வு பெற்றார். விருப்பப் ஓய்வு பணம் பெறுவதற்கு அப்பகுதியில் உள்ள வட்டார கல்வி அலுவலர் நேசமணி அந்த ஆசிரியருக்கு என்.ஒ.சி வழங்காமல் உள்ளதால் விருப்ப ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் பணி பலன்கள் ஓராண்டாகியும் கிடப்பில் உள்ளது. இது குறித்து கடந்த அக்டோபர் மாதம் கோவை செட்டிபாளையம் காவல் நிலையத்தில் வட்டார கல்வி அலுவலர் மீது புகார் அளித்து உள்ளனர். இதனை அடுத்து வட்டார கல்வி அலுவலர் நேசமணி நிலுவையில் உள்ள வி.ஆர்.எஸ் தொகையை பெற்றுத் தருவதாக எழுத்துப் பூர்வமாக செட்டிபாளையம் காவல் நிலையத்தில் உறுதி அளித்துள்ளார்.
மேலும் அவர் வி.ஆர்.எஸ் பணம் பெற்று கொடுக்க என்.ஓ.சி அதற்குண்டான எந்தப் பணிகளையும் இதுவரை மேற்கொள்ளாத காரணத்தினால் ஆத்திரமடைந்த சக ஆசிரியர்கள் மதுக்கரை வட்டார கல்வி அலுவலர் நேசமணி கண்டித்து இன்று பிற்பகல் 2 மணி முதல் மதுக்கரை வட்டார கல்வி அலுவலகத்தில் பெண் ஆசிரியர்கள் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் தலைமை ஆசிரியர் ஜெயந்தி மாலாவிற்கு உடனடியாக விருப்ப ஓய்வு தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தற்பொழுது வரை உள்ளே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.