Skip to content
Home » கவுரவ விரிவுரையாளர்கள் மேலும் நியமனம்…. அமைச்சர் கோவி. செழியன்

கவுரவ விரிவுரையாளர்கள் மேலும் நியமனம்…. அமைச்சர் கோவி. செழியன்

  • by Authour

அரசு கல்லூரிகளில் தேவைக்கேற்ப கூடுதலாக கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்று அமைச்சர் கோவி செழியன் தெரிவித்தார்.

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் சார்பில் ‘விளைவுகள் அடிப்படையிலான கல்வி’ என்ற தலைப்பிலான பயிலரங்கம் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து பேசியதாவது:

. கல்வி முறையால் மாணவர்கள் திறமை மற்றும் தன்னம்பிக்கை பெற்று தொழில் முனைவோர்களாக மாறவேண்டும். இதுபோன்ற பயிலரங்கங்கள் பல்கலைக்கழகங்களிலும், மண்டல, கல்லூரி அளவில் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கோவி.செழியன் கூறியதாவது; கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளமாக ரூ.50,000 வழங்க வேண்டுமென பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) வலியுறுத்துகிறது. நிதிச் சுமைக்கு இடையேயும் தமிழகத்தில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.25,000 தரப்படுகிறது. அதேநேரம் கவுரவ விரிவுரையாளர்களுக்கான சம்பளம் நிதியாக யுஜிசி ஆண்டுக்கு ரூ.40 கோடி தரவேண்டும். 2017-ல் நிறுத்தப்பட்ட இந்த தொகை இதுவரை வழங்கப்படவில்லை.

அதேநேரம், மாணவர்களின் கல்வி நலன் கருதி சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்களை நியமித்து பணியைத் தொடர்கிறோம். மேலும், தேவைக்கேற்ப கூடுதல் கவுரவ விரிவுரையாளர்களை விரைவில் நியமிக்கவும் முடிவு செய்துள்ளோம். அதனுடன் நிரந்தர பேராசிரியர்களை உருவாக்கவும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர் இன்றி இருப்பதற்கு யார் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், மாணவர்களின் நலன் கருதி, அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *