தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்வதற்கு அரியலூர் மாவட்டம், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 3 பேருந்துகளில் 150 தூய்மை பணியாளர்கள் மற்றும் 14 அலுவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அரியலூர் மாவட்டத்தின் சார்பாக ஃபெஞ்சல் புயல் வெள்ளம் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் மிக அதிக அளவிலான மழை பொழிவு ஏற்பட்டு அதன் மூலம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு அரியலூர் மாவட்டத்திலிருந்து உதவி இயக்குநர், வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் என 3 பேருந்துகளில் 150 தூய்மை பணியாளர்கள் மற்றும் 14 அலுவலர்கள் விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்று நிவாரண பொருட்கள் வழங்கவும், தூய்மைபணிகள் மேற்கொள்ளவும், அரியலூர் மாவட்டம் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பாக பணிகளை மேற்கொள்வதற்கு முகக்கவசம் 15,000, பூட்ஸ் 150 செட், கை கிளவுஸ் 150 செட், அன்னக்கூடை 150, காசட்டி 150, மண்வெட்டி 24, கைவாலி 24 மற்றும் போர்க் 24 எண்ணிக்கையில் உபகரணங்களும் மற்றும் பொருட்களும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.