இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, இந்தியாவுக்காக ஒலிம்பிக் உள்பட பல்வேறு உலகத்தர பேட்மிண்டன் போட்டிகளில் ஆடிக்கொண்டிருக்கிறார். 29வயதாகும் சிந்துவுக்கு வரும் 22ம் தேதி உதய்பூரில் திருமணம் நடக்கிறது.24ம் தேதி தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் திருமண வரவேற்பு நடக்கிறது. வெங்கடதத்தா சாய் என்பவரை மணக்கிறார். மாப்பிள்ளை சாய் ஐடி துறையில் உள்ளவர். போசிடெக்ஸ் டெக்னாலஜிஸின் நிர்வாக இயக்குனராக உள்ளார்.
இந்த தகவலை சிந்துவின் தந்தை தெரிவித்துள்ளார். இரு குடும்பத்தாரும் பேசி முடிவு செய்த திருமணம்.
சிந்து ரியோடி ஜெனிரோவில் 2016 நடந்த ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார். இதன்பிறகு, 2021 ம் ஆண்டில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். இதன் மூலம் இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் அவர் பெற்றார். இதுவரை 5 உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களை சிந்து வென்றுள்ளார்