Skip to content
Home » திருச்சியிலிருந்து விழுப்புரத்திற்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு…

திருச்சியிலிருந்து விழுப்புரத்திற்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு…

விழுப்புரம் வெள்ள பாதிப்புகளுக்கு திருச்சியிலிருந்து 1.50 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் மற்றும் 450-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கொடி அசைத்து அனுப்பி வைத்தார்

விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காகவும், தூய்மை பணிகளை மேற்கொள்வதற்காகவும் தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் அடங்கிய 15 பொருட்கள் உடன் கூடிய 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆன நிவாரண பொருட்களை திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

268 தூய்மை பணியாளர்கள் மற்றும் 138 தூய்மை காவலர்கள் ஆகியோர் பேருந்துகள் மூலமாக நிவாரண பணிகளை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டன. உணவு பொட்டலங்களை சாப்பிட்டு பார்த்தும், பாதுகாப்பாக வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் அறிவுரைகளை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்..

உணவுப் பொருட்கள் திருச்சியில் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது முதற்கட்டமாக 25 ஆயிரம் உணவு பொட்டளங்கள் திருச்சியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன திருச்சி மாவட்டம் மற்றும் மாநகராட்சியும் இணைந்து தொடர்ந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நிவாரண பொருட்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் 450க்கும் மேற்பட்டோர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சியில் 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மரங்களை அகற்றுவதற்கு தேவையான உபகரணங்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். தற்போது 20000 உணவு பொட்டலங்கள் அனுப்பப்படுகிறது. தொடர்ந்து உணவு பொட்டலங்கள் தயார் செய்து அனுப்பப்படும். இதேபோன்று மாநகராட்சியிலும் உணவு தயார் செய்து அனுப்பப்படுகிறது. அது இல்லாமல் சமையலுக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட பத்தாயிரம் உணவு வகை பைகளும் அனுப்பப்படுகிறது என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!