திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில் மேலபுலிவார்டு ரோடு நடுகுஜிலி தெரு பகுதியில் கோட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அப்பொழுது அவர்களிடம் இருந்து போதை மாத்திரை இருந்தது தெரிய வந்தது.இதையடுத்து போலீசார் இரண்டு பேரையும் பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் திருச்சி தென்னூர் ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்த பிரவீன் கார்த்தி (24) சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் (24)என்பது தெரியவந்தது. இவர்களிடமிருந்து போதை மாத்திரைகள், ஊசிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் இரண்டு பேரும் ரவுடி பட்டியலில் உள்ளனர் தெரியவந்தது.இந்த இரண்டு ரவுடிகளும், போதை மாத்திரையை எங்கிருந்து யாரிடம் வாங்கினார்கள் என்பது குறித்தும்,போதை மாத்திரைகளை யாரிடம் கொடுக்க இருந்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.