வங்க கடலில் மையம் கொண்டிருந்த பெஞ்சல் புயல் கடந்த 30ம் தேதி இரவு புதுவை அருகே கரையை கடந்தது. இதனால் தமிழகத்தில் விழுப்புரம்,க டலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, சேலம் உள்பட பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. 12க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். ஏராளமான கால்நடைகள் பலியானது. 1 லட்சம் ஏக்கருக்கு மேல் பயிர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
புயல், வெள்ள சேதம் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உடனடியாக நிவாரண உதவி அளிக்கும்படி கேட்டுக்கொண்டு உள்ளார். இந்த நிலையில் பிரதமர் மோடி, போனில் முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு புயல், வெள்ள சேதம் குறித்து விசாரித்தார். அப்போதும் முதல்வர் நிவாரண நிதி குறித்து பிரதமரிடம் நினைவூட்டினார். மத்திய குழுவை அனுப்பும்படியும் முதல்வர் கேட்டுக்கொண்டார்.