கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 18 பேரை, 2 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். கைதான மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படை அழைத்துச் சென்றது. தமிழகம் மற்றும் காரைக்காலில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகியுள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.