கோவை மாவட்டம், தொப்பம்பட்டியில் உள்ள பேர்லேண்ட்ஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் தியாகராஜன். இவரது மகள் கீர்த்தனா. 22 வயதான இவர் கற்பகம் மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் பயின்று வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு பரோட்டா சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்றுள்ளார். இன்று காலை கீர்த்தனா வெகுநேரம் ஆகியும் எழுந்துக்காததை கவனித்த பெற்றோர் சென்று பார்த்த போது மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை உடனடியாக பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் கீர்த்தனா வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், நேற்று கீர்த்தனா சாப்பிட்ட புரோட்டா எங்கு தயார் செய்யப்பட்டது, புரோட்டாவில் ஏதும் கலப்படம் சேர்க்கப்பட்டுள்ளதா என பல கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.