கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இன்று வெள்ளம் பாதித்த பகுதிகளை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
போச்சம்பள்ளி, ஊத்தங்கரையில் வெள்ளம் பாதிப்பு அதிக அளவு ஏற்பட்டது. ஊத்தங்கரை அண்ணாநகர் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து செலலப்பட்டன.போச்சம்பள்ளி, ஊத்தங்கரையில் வெள்ள பாதிப்பு அதிக அளவு ஏற்பட்டது.
இதனால் சேதமடைந்த வாகனங்களை சரிசெய்ய அதிக செலவு ஆகும். அதற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் வெள்ளம் பாதித்த பகுதி மக்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் வெள்ளம் பாதித்த பகுதி மக்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.