புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், எய்டு இந்தியா (AID INDIA) கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், இடைநிற்றல் பள்ளி பெண் குழந்தைகளுக்கு, கல்வி பயில்வதை ஊக்குவித்திடும் வகையில் மிதிவண்டிகளையும் மற்றும் தாய்/ தந்தையை இழந்த கல்லூரி மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளையும், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் இன்று வழங்கினார்.
பின்னர் கலெக்டர் அருணா தெரிவித்ததாவது: எய்டு இந்தியா (AID INDIA) கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், இடைநிற்றல் பள்ளி பெண் குழந்தைகள் (பழங்குடியின பெண் குழந்தைகள்) கட்டாயம் கல்வி பயில வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையில், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், நெய்வேலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும், காமராஜ் நகர், ரெங்கம்மாள் சத்திரம் பகுதியில் வதிக்கும் 30 பெண் குழந்தைகளுக்கு ரூ.6,500/- வீதம் ரூ.1,95,000 மதிப்புடைய மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, தாய்/ தந்தையை இழந்த 6 கல்லூரி மாணாக்கர்களுக்கு 1,33,000/- மதிப்புடைய கல்வி உதவித்தொகைக்கான காசோலைகள் என மொத்தம் ரூ.3,28,000/- மதிப்புடைய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
எனவே, மாணாக்கர்கள் அனைவரும் கல்வி நல்ல முறையில் இடைநிற்றல் இல்லாமல் பயின்று உயர்ந்த நிலையினை அடைந்திட வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் .எம்.சின்னத்துரை , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) .முருகேசன், மாவட்ட கல்வி அலுவலர்கள் ரமேஷ் (புதுக்கோட்டை), செந்தில் (தொடக்கக் கல்வி), மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (எய்டு இந்தியா) .சி.ராஜா, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினர் .ஆர்.தங்கம், இணை ஒருங்கிணைப்பாளர் .ஆர்.பிச்சம்மாள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.