திருவண்ணாமலை மாவட்டத்தில் பெஞ்ஜல் புயல் காரணமாக நேற்று முன்தினம் காலை முதல் கனமழை பெய்தது. தொடர்ந்து இடைவிடாமல் விடிய, விடிய பெய்த மழை நேற்றும் தொடர்ந்தது.பகல் வேளையில் மழையின் வேகம் அதிகரித்து காணப்பட்டது.திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலை உச்சியில் சுமார் 100 அடி உயரத்தில் இருந்து பாறை ஒன்று உருண்டு வந்தது. சற்றும்எதிர்பாராமல் வேகமாக உருண்டு வந்த பாறை, வ உ சி. நகர் தெருவில் வீடுகளின் மீது விழுந்தது. இதில் இரு வீடுகளில் இருந்த 7 பேர் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உடனடியாக அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை வ.உ.சி. நகரில் மேலும் ஒரு இடத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏற்கனவே ஒரு இடத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 7 பேர் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தநிலையில் மேலும் ஒரு இடத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மண் சரிவு ஏற்பட்ட இடத்திற்கு அருகிலேயே மண் சாிமண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே இடிந்த வீடுகளில் உள்ளே எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது குறித்து முழு விவரங்கள் பாறைகளை அகற்றிய பிறகு தான் தெரியவரும்.