புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (2.12.2024) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. , மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, மக்களின் குறைகளை கேட்டார். ஏராளமான மக்கள் மனு கொடுத்தனர். மாற்றுத்திறனாளிகளும் மனுக்களுடன் வந்திருந்தனர்.
அவர்கள் இருந்த இடத்திற்கே வந்து கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலர் .அ.கோ.ராஜராஜன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.