பெஞ்சல் புயல் புதுச்சேரியில் கரை கடந்தது. இதன் காரணமாக புதுச்சேரி பெரும் பாதிப்புக்கு உள்ளானது. பலர் உயிரிழந்துள்ளனர்.புதுச்சேரி மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி இன்று அளித்த பேட்டியில், புயலால் உயிா் இழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும். மாடுகளுக்கு ரூ.40 ஆயிரமும், படகுகள் சேதத்திற்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும். புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் ரேசன் கார்டுகள் மூலம் ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.