மழை வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தின் நிலவரத்தை அமைச்சர் எ.வ.வேலுவிடம் கேட்டறிந்தேன். கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சு.முத்துசாமியையும், தருமபுரி மாவட்டத்திற்கு ஆர்.ராஜேந்திரனையும் பொறுப்பு அமைச்சராக நியமித்து மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட அனுப்பி வைத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மழை பாதிப்பு ஏற்பட்ட மாவட்டஆட்சியர்களுடனும் தொடர்ந்து பேசிக் கள நிலவரத்தைக் கண்காணித்து வருகிறேன். இயற்கைச் சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் சரிசெய்து இயல்புநிலையை மீட்டெடுப்போம்.” என முதல்வர் பதிவிட்டுள்ளார்