அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் விளந்தை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, ரீடு தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரீடு தொண்டு நிறுவன நிர்வாக இயக்குனர் செல்வம் தலைமை தாங்கினார். ஆண்டிமடம் காவல் ஆய்வாளர் நடராஜ் கலந்து கொண்டு கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் பள்ளி வளாகத்தில் முடிவடைந்தது. பேரணியில் கலந்து கொண்ட அரசு பள்ளி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் கையில் பதாகைகளை ஏந்தி, எய்ட்ஸால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர் ஏற்படுத்தினர்.