Skip to content
Home » மகாராஷ்டிரா முதல்வராக பட்னவிஸ் 5ம் தேதி பதவியேற்கிறார்.

மகாராஷ்டிரா முதல்வராக பட்னவிஸ் 5ம் தேதி பதவியேற்கிறார்.

  • by Authour

மகாராஷ்டிரா சட்டமன்ற  தேர்தல் கடந்த நம்பவர் மாதம் 20ம் தேதி நடந்தது. 23ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.  மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் 230 இடங்களை  பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி கைப்பற்றியது. பாஜக 132 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், என்சிபி 41 இடங்களிலும் வெற்றி பெற்றன . ஆனாலும் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளதால்  பதவி ஏற்பதிலும் இன்னும் சிக்கல் நீடிக்கிறது.

“மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக தேவேந்திர பட்னாவிஸின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது.  நாளை நடைபெறும்  சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில்  அவர் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்

இது பற்றி ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஏக்நாத் ஷிண்டே, “முதல்வர் பதவி தொடர்பாக பாஜக தலைமை எடுக்கும் முடிவை நானும் சிவ சேனாவும் ஏற்போம் என்றும், எங்கள் முழு ஆதரவும் இருக்கும் என்றும் நான் ஏற்கனவே கூறியுள்ளேன். (முதல்வர் பதவி தவிர்த்த) மற்ற விவகாரங்கள் தொடர்பாக பேச்சுக்கள் நடந்து கொண்டிருக்கின்றன. கடந்த வாரம் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஒரு சந்திப்பு நடந்தது, இப்போது நாங்கள் மூன்று கூட்டணி கட்சிகளும் ஒன்றாக அமர்ந்து அரசாங்கத்தை அமைப்பது குறித்து விவாதிப்போம்,” என்று கூறினார்.

சிவ சேனாவின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக ஏக்நாத் ஷிண்டேவும், தேசியவாத காங்கிரஸ் தலைவராக அஜித் பவாரும் அந்தந்த கட்சிகளின் எம்எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் சட்டமன்றக் கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் தொடர்பான தகவல் இதுவரை வரவில்லை என்று பாஜக எம்எல்ஏக்கள் கூறியுள்ளனர். எனினும், இன்று அல்லது நாளை அதற்கான கூட்டம் நடைபெறும் என எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் பதவியேற்பு விழா வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. பதவியேற்பு விழா மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *