பெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இன்று திமுக எம்.பிக்கள் கோரிக்கை வைத்தனர் உடனடியாக மத்திய குழுவை அனுப்பி சேதத்தை பார்வையிட வேண்டும். ஆரம்ப கட்ட நிவாரண பணிக்கு ரூ.1000 கோடி ஒதுக்க வேண்டும் என திமுக எம்.பிக்கள் வலியுறுத்தினர்.
ஆனால் சபாநாயகர் ஓம்பிர்லா இதற்கு அனுமதி அளிக்க மறுத்தார். இது போல மாநிலங்களைவிலும் திமுக எம்.பிக்கள் வைத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனால் இரு அவைகளிலும் திமுக , கம்யூனிஸ்ட் எம்.பிக்கள் போர்க்கோலம் பூண்டனர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
இதற்கு ஆளுங்கட்சி தரப்பில் இருந்து எதிர் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.