பெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டமும் அதிகமாக பாதிக்கப்பட்டது. அந்த பகுதிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடலூர் மாநகராட்சி சி.கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் நிவாரண பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் .வி. செந்தில்பாலாஜி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், மற்றும் சிபி ஆதித்யா செந்தில்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.