பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா. இவர் 2018ம் ஆண்டு திமுக எம்.பி. கனிமொழி குறித்து மிகவும் தரம் தாழ்ந்த வகையில் எக்ஸ் தளத்தில் விமர்சனம் செய்திருந்தார். இது குறித்து கனி மொழி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் ஹெச். ராஜாவுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இது போல 2018ல் பெரியார் சிலையை உடைப்பேன் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் ஹெச். ராஜா மீது வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கிலும் இன்று 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து தனிக்கோர்ட் உத்தரவிட்டது.