தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷிற்கு இன்று பிறந்த நாள். இதனையொட்டி முதல்வர் ஸ்டாலினிடம் அமைச்சர் மகேஷ் பிறந்தநாள் வாழ்த்து பெற்றார். இதனை தொடர்ந்து அமைச்சர் மகேஷ் தனது X-தளத்தில் கூறியிருப்பதாவது: தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கொள்கை
வழியில் எங்களை வழி நடத்தும் தமிழ்நாட்டின் தலைமையாசிரியர், எனது அரசியல் ஆசான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் பிறந்தநாள் வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.