காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டார். அந்த பயணம் வெற்றிகரமாக நேற்று நிறைவுபெற்றது. இந்த யாத்திரையின் வெற்றி விழாவை காங்கிரசார் கொண்டாடி வருகிறார்கள். திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரில் நடந்த விழாவில் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் காடுவெட்டி சத்தியமூர்த்தி கலந்து கொண்டு கட்சிக்கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்
இந்த விழாவில் காட்டுப்புத்தூர் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் குணசேகரன் மற்றும் தொட்டியம், காட்டுப்புத்தூர் பகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .பின்னர் மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்தற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.