விழுப்புரம் அருகே தண்டவாளத்தில் தண்ணீர் இருப்பதால் பல்லவன், சோழன், வைகை விரைவு ரயில்கள் இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட வேண்டிய, சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் வரைவு ரயில், சென்னை – மதுரை இடையேயான தேஜஸ் விரைவு ரயில், சென்னை – திருச்சி சோழன் விரைவு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. விழுப்புரம், விக்கிரவாண்டி இடையே தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியிருப்பதாலும். விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கம் ரயில்வே பாலத்தில் அபாய அளவை தாண்டி தண்ணீர் செல்வதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை சென்னை செல்ல வேண்டிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் விழுப்புரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.