தென்கிழக்கு வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக டெல்டா மற்றும் கடலோர மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் வானிலை மையம் மழை பெய்யும் என அறிவித்திருந்த நிலையில் கடந்த மூன்று தினங்களாக மழை இல்லாமல் வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழையும் லேசான தரைக் காற்றும் பரவலாக இருந்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது மயிலாடுதுறை, குத்தாலம், கோமல், திருவாலங்காடு, மணல்மேடு, வில்லியநல்லூர், மன்னம் பந்தல், செம்பனார்கோயில், ஆக்கூர், திருக்கடையூர், அனந்தமங்கலம், பொறையார், பெரம்பூர், மங்கநல்லூர், வடகரை, மாணிக்கப்பங்கு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழையாக தொடங்கி மிதமான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த மழையால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படடுள்ளது.